Vallalar Meditation

Wednesday, October 21, 2009

இச்சை

நான்காம் திருமுறை(3 இடங்களில் உள்ளன )

23.சிவகாமவல்லி துதி
#2810. திருவே திகழுங் கலைமகளே திருவே மலையான் திருமகளே
உருவே இச்சை மயமேமெய் உணர்வின் வணமே உயர்இன்பக்
குருவே ஆதித் தனித்தாயே குலவும் பரையாம் பெருந்தாயே
மருவே மலரே சிவகாம வல்லி மணியே வந்தருளே
 
30.பேரன்புக் கண்ணி
#2958. இச்சைநின்மே லன்றியெனக் கெள்ளளவும் வேறுமொன்றில்
இச்சையிலை நின்னாணை யென்னருமை ஐயாவே
 
ஐந்தாம் திருமுறை(1 இடங்களில் உள்ளன )

7.அதிசய மாலை
#3213. எற்றேஈ ததிசயம் ஈததிசயம் என் இசைப்பேன்
இச்சையெலாம் விடுத்துவனத் திடத்தும்மலை யிடத்தும்
உற்றேமெய்த் தவம்புரிவார் உன்னிவிழித் திருப்ப
உலகவிட யங்களையே விலகவிட மாட்டேன்
கற்றேதும் அறியகிலேன் கடையரினுங் கடையேன்
கருணையிலாக் கல்மனத்துக் கள்வன்எனைக் கருதிச்
சற்றேயும் அன்றுமிகப் பெரிதெனக்கிங் களித்தான்
தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே
 
ஆறாம் திருமுறை(47 இடங்களில் உள்ளன )

5.மாயைவலிக் கழுங்கல்

#3312. இருளை யேஒளி எனமதித் திருந்தேன்
இச்சை யேபெரு விச்சைஎன் றலந்தேன்
மருளை யேதரு மனக்குரங் கோடும்
வனமெ லாஞ்சுழன் றினம்எனத் திரிந்தேன்
பொருளை நாடுநற் புந்திசெய் தறியேன்
பொதுவி லேநடம் புரிகின்றோய் உன்றன்
அருளை மேவுதற் கென்செயக் கடவேன்
அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே
 
6.முறையீடு
#3314. அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்
அறிவறிந்த அந்தணர்பால் செறியும்நெறி அறியேன்
நகங்கானம் உறுதவர்போல் நலம்புரிந்தும் அறியேன்
நச்சுமரக் கனிபோல இச்சைகனிந் துழல்வேன்
மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும்
மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
இகங்காணத் திரிகின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே
 
 
8.ஆன்ம விசாரத் தழுங்கல் 

 #3343. போகமே விழைந்தேன் புலைமனச் சிறியேன் பூப்பினும் புணர்ந்தவெம் பொறியேன்
ஏகமே பொருள்என் றறிந்திலேன் பொருளின் இச்சையால் எருதுநோ வறியாக்
காகமேஎனப்போய்ப்பிறர் தமைவருத்திக்களித்தபாதகத்தொழிற்கடையேன்
மோகமேஉடையேன் என்னினும்எந்தாய் முனிந்திடேல்காத்தருள் எனையே
 
9.அவா அறுத்தல் 

 #3360. மிளகுமேன் மேலும் சேர்த்தபல் உணவில் விருப்பெலாம் வைத்தனன்உதவாச்
சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த துவையலே சுவர்க்கம்என் றுண்டேன்
இளகிலா மனத்தேன் இனியபச் சடிசில் எவற்றிலும் இச்சைவைத் திசைத்தேன்
குளகுணும் விலங்கின் இலைக்கறிக் காசை கொண்டனன் என்செய்வேன்எந்தாய்
 
11.அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு

#3385. ஞானமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டிடவே
நடக்கின்றேன் அந்தோமுன் நடந்தவழி அறியேன்
ஊனமிகும் ஆணவமாம் பாவிஎதிர்ப் படுமோ
உடைமைஎலாம் பறித்திடுமோ நடைமெலிந்து போமோ
ஈனமுறும் அகங்காரப் புலிகுறுக்கே வருமோ
இச்சைஎனும் இராக்கதப்பேய் எனைப்பிடித்துக் கொளுமோ
ஆனமலத் தடைநீக்க அருட்டுணைதான் உறுமோ
ஐயர்திரு வுளம்எதுவோ யாதுமறிந் திலனே
 
12.பிள்ளைச் சிறு விண்ணப்பம்

#3390. அப்பணி முடி என் அப்பனே மன்றில் ஆனந்த நடம்புரி அரசே
இப்புவி தனிலே அறிவுவந் ததுதொட் டிந்தநாள் வரையும்என் தனக்கே
எப்பணி இட்டாய் அப்பணி அலதென் இச்சையால் புரிந்ததொன் றிலையே
செப்புவ தென்நான் செய்தவை எல்லாம் திருவுளம் அறியுமே எந்தாய்
 
12.பிள்ளைச் சிறு விண்ணப்பம்
#3398. இவ்வுல கதிலே இறைஅர சாட்சி இன்பத்தும் மற்றைஇன் பத்தும்
எவ்வள வெனினும் இச்சைஒன் றறியேன் எண்ணுதோ றருவருக் கின்றேன்
அவ்வுலக கதிலே இந்திரர் பிரமர் அரிமுத லோர்அடை கின்ற
கவ்வைஇன் பத்தும் ஆசைசற் றறியேன் எந்தைஎன் கருத்தறிந் ததுவே
 
12.பிள்ளைச் சிறு விண்ணப்பம்
#3399. சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும்
புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசைசற் றறியேன்
பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்திபெற் றிடவும்
உறியதோர் இச்சை எனக்கிலை என்றன் உள்ளம்நீ அறிந்ததே எந்தாய்
 
12.பிள்ளைச் சிறு விண்ணப்பம்
#3401. சற்சபைக் குரியார் தம்மொடும் கூடித் தனித்தபே ரன்புமெய் அறிவும்
நற்சபைக் குரிய ஒழுக்கமும் அழியா நல்லமெய் வாழ்க்கையும் பெற்றே
சிற்சபை நடமும் பொற்சபை நடமும் தினந்தொறும் பாடிநின் றாடித்
தெற்சபை உலகத் துயிர்க்கெலாம் இன்பம் செய்வதென் இச்சையாம் எந்தாய்
 
12.பிள்ளைச் சிறு விண்ணப்பம்
#3402. உருமலி உலகில் உன்னைநான் கலந்தே ஊழிதோ றூழியும் பிரியா
தொருமையுற் றழியாப் பெருமைபெற் றடியேன் உன்னையே பாடி நின்றாடி
இருநிலத் தோங்கிக் களிக்கவும் பிறருக்கிடுக்கணுற் றால்அவை தவிர்த்தே
திருமணிப் பொதுவில் அன்புடையவராச் செய்யவும் இச்சைகாண்எந்தாய்
 
12.பிள்ளைச் சிறு விண்ணப்பம்
#3403. எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே எண்ணிநல் இன்புறச் செயவும்
அவ்வுயிர் களுக்கு வரும்இடை யூற்றை அகற்றியே அச்சநீக் கிடவும்
செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச் சிவசிவ என்றுகூத் தாடி
ஒவ்வுறு களிப்பால் அழிவுறா திங்கே ஓங்கவும் இச்சைகாண் எந்தாய்
 
12.பிள்ளைச் சிறு விண்ணப்பம்
#3405. திருவளர் திருச்சிற் றம்பலம் ஓங்கும் சிதம்பரம் எனும்பெருங் கோயில்
உருவளர் மறையும் ஆகமக் கலையும் உரைத்தவா றியல்பெறப் புதுக்கி
மருவளர் மலரின் விளக்கிநின் மேனி வண்ணங்கண் டுளங்களித் திடவும்
கருவளர் உலகில் திருவிழாக் காட்சி காணவும் இச்சைகாண் எந்தாய்
 
12.பிள்ளைச் சிறு விண்ணப்பம்
 #3406. தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார்திருக் கோயில்கண் டிடவும்205
துங்கமே பெறுஞ்சற் சங்கம்நீ டூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன்
அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சைகாண் எந்தாய்
 
12.பிள்ளைச் சிறு விண்ணப்பம்
#3407. கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த கடுந்துயர் அச்சமா திகளைத்
தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் தரவும்வன் புலைகொலை இரண்டும்
ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க உஞற்றவும் அம்பலந் தனிலே
மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சைகாண்எந்தாய்
 
12.பிள்ளைச் சிறு விண்ணப்பம்
#3409. இவையலால் பிறிதோர் விடயத்தில் இச்சை எனக்கிலை இவைஎலாம் என்னுள்
சிவையொடும் அமர்ந்த பெருந்தயா நிதிநின் திருவுளத் தறிந்தது தானே
தவம்இலேன் எனினும் இச்சையின் படிநீ தருதலே வேண்டும்இவ் விச்சை
நவைஇலா இச்சை எனஅறி விக்க அறிந்தனன் நவின்றனன் எந்தாய்
 
13.பிள்ளைப் பெரு விண்ணப்பம்
#3455. பொருளிலே உலகம் இருப்பதா தலினால் புரிந்துநாம் ஒருவர்பால் பலகால்
மருவினால் பொருளின் இச்சையால் பலகால் மருவுகின் றான்எனக் கருதி
வெருவுவர் எனநான் அஞ்சிஎவ் விடத்தும் மேவிலேன் எந்தைநீ அறிவாய்
ஒருவும்அப் பொருளை நினைத்தபோ தெல்லாம் உவட்டினேன் இதுவும்நீ அறிவாய்
 
15.அபயத் திறன்
#3572. வன்மையில் பொருள்மேல் இச்சைஇல் லவன்போல்
வாதிபோல் வார்த்தைகள் வழங்கி
அன்மையில் பிறர்பால் உளவினால் பொருளை
அடிக்கடி வாங்கிய கொடியேன்
இன்மையுற் றவருக் குதவிலேன் பொருளை
எனைவிடக் கொடியருக் கீந்தேன்
நன்மையுற் றறியேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே
 
22.நடராஜபதி மாலை
#3654. மெய்தழைய உள்ளங் குளிர்ந்துவகை மாறாது
மேன்மேற் கலந்துபொங்க
விச்சைஅறி வோங்கஎன் இச்சைஅறி வனுபவம்
விளங்கஅறி வறிவதாகி
உய்தழை வளித்தெலாம் வல்லசித் ததுதந்
துவட்டாதுள் ஊறிஊறி
ஊற்றெழுந் தென்னையும் தானாக்கி என்னுளே
உள்ளபடி உள்ளஅமுதே
கைதழைய வந்தவான் கனியே எலாங்கண்ட
கண்ணே கலாந்தநடுவே
கற்பனைஇ லாதோங்கு சிற்சபா மணியே
கணிப்பருங் கருணைநிறைவே
துய்தழை பரப்பித் தழைந்ததரு வேஅருட்
சுகபோக யோகஉருவே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே
 
22.நடராஜபதி மாலை
#3680. அந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக்
கன்புடன் உரைத்தபடியே
அற்புதம்எ லாம்வல்ல நம்அருட் பேரொளி
அளித்தனம் மகிழ்ந்துன்உள்ளே
இந்நாள் தொடுத்துநீ எண்ணிய படிக்கே
இயற்றிவிளை யாடிமகிழ்க
என்றும்இற வாநிலையில் இன்பஅனு பவனாகி
இயல்சுத்த மாதிமூன்றும்
எந்நாளும் உன்இச்சை வழிபெற்று வாழ்கயாம்
எய்திநின் னுட்கலந்தேம்
இனிஎந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மைஈ
தெம்மாணை என்றகுருவே
மன்னாகி என்பெரிய வாழ்வாகி அழியாத
வரமாகி நின்றசிவமே
மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
வல்லநட ராஜபதியே
 
29.சிற்சபை விளக்கம்
#3775. கரண வாதனை யால்மிக மயங்கிக்
கலங்கி னேன்ஒரு களைகணும் அறியேன்
மரணம் நீக்கிட வந்துநிற் கின்றேன்
வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
இரணன் என்றெனை எண்ணிடேல் பிறிதோர்
இச்சை ஒன்றிலேன் எந்தைநின் உபய
சரணம் ஈந்தருள் வாய்வடல் அரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே
 
38.பேரருள் வாய்மையை வியத்தல்
#3868. ஆக்கல்ஒன் றோதொழில் ஐந்தையும் தந்திந்த அண்டபிண்ட
வீக்கம்எல் லாம்சென்றுன் இச்சையின் வண்ணம் விளங்குகநீ
ஏக்கமு றேல்என் றுரைத்தருட் சோதியும் ஈந்தெனக்கே
ஊக்கமெ லாம்உற உட்கலந் தான்என் உடையவனே
 
41.பரசிவ நிலை
#3909. இச்சைஎலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம்
இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்
எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம்
எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம்
பிச்சகற்றும் பெருந்தெய்வம் சிவகாமி எனும்ஓர்
பெண்கொண்ட தெய்வம்எங்கும் கண்கண்ட தெய்வம்
செச்சைமலர் எனவிளங்குந் திருமேனித் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்
 
57.அருள்விளக்க மாலை
#4092. இன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே
ஏங்கியபோ தென்றன்னைத் தாங்கியநல் துணையே
அன்புறஎன் உட்கலந்தே அண்ணிக்கும் அமுதே
அச்சமெலாம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட குருவே
என்பருவம் குறியாதே எனைமணந்த பதியே
இச்சையுற்ற படிஎல்லாம் எனக்கருளும் துரையே
துன்பறமெய் அன்பருக்கே பொதுநடஞ்செய் அரசே
தூயதிரு வடிகளுக்கென் சொல்லும்அணிந் தருளே
 
57.அருள்விளக்க மாலை
 #4142. இச்சைஒன்றும் இல்லாதே இருந்தஎனக் கிங்கே
இயலுறுசன் மார்க்கநிலைக் கிச்சையைஉண் டாக்கித்
தச்சுறவே பிறமுயற்சி செயுந்தோறும் அவற்றைத்
தடையாக்கி உலகறியத் தடைதீர்த்த குருவே
எச்சமய முடிபுகளும் திருச்சிற்றம் பலத்தே
இருந்தஎன எனக்கருளி இசைவித்த இறையே
முச்சகமும் புகழமணி மன்றிடத்தே நடிக்கும்
முதல்அரசே என்னுடைய மொழியும்அணிந் தருளே
 
59.பாங்கி தலைவிபெற்றி உரைத்தல்
#4202. பனம்பழமே எனினும்இந்தப் பசிதவிர்த்தால் போதும்
பாரும்எனப் பகர்கின்ற பாவையர்போல் பகராள்
இனம்பழமோ கங்கலந்தாள் சிவானுபவத் தல்லால்
எந்தஅனு பவங்களிலும் இச்சைஇல்லாள் அவர்தம்
மனம்பழமோ காயோஎன் றறிந்துவர விடுத்தாள்
மற்றவர்போல் காசுபணத் தாசைவைத்து வருந்தாள்
தனம்பழமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே
 
59.பாங்கி தலைவிபெற்றி உரைத்தல்
#4205. அன்னையைக்கண் டம்மாநீ அம்பலத்தென் கணவர்
அடியவளேல் மிகவருக அல்லள்எனில் இங்கே
என்னைஉனக் கிருக்கின்ற தேகுகஎன் றுரைப்பாள்
இச்சைஎலாம் உம்மிடத்தே இசைந்தனள்இங் கிவளை
முன்னையள்என் றெண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால்
முடுகிஉயிர் விடுத்திடுவாள் கடுகிவரல் உளதேல்
மன்னவரே உமதுதிரு வாய்மலர வேண்டும்
வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே
 
59.பாங்கி தலைவிபெற்றி உரைத்தல்
#4208. என்னுயிரில் கலந்துகொண்டார் வரில்அவர்தாம் இருக்க
இடம்புனைக என்கின்றாள் இச்சைமய மாகித்
தன்னுயிர்தன் உடல்மறந்தாள் இருந்தறியாள் படுத்தும்
தரித்தறியாள் எழுந்தெழுந்து தனித்தொருசார் திரிவாள்
அன்னமுண அழைத்தாலும் கேட்பதிலாள் உலகில்
அணங்கனையார் அதிசயிக்கும் குணங்கள்பல பெற்றாள்
மின்னிவளை விழைவதுண்டேல் வாய்மலர வேண்டும்
மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே
 
60.தலைவி வருந்தல்
 #4214. இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
ஏடிஎனக் கிணைஎவர்கள் என்றஅத னாலோ
எச்சமயத் தேவரையும் இனிமதிக்க மாட்டேன்
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
நச்சுமரக் கனிபோலே பாங்கிமனங் கசந்தாள்
நயந்தெடுத்து வளர்த்தவளும் கயந்தெடுப்புப் புகன்றாள்
அச்சமிலாள் இவள்என்றே அலர்உரைத்தார் மடவார்
அண்ணல்நட ராயர்திரு எண்ணம்அறிந் திலனே
 
65.உபதேச வினா
#4278. சின்மய வெளியிடைத் தன்மய மாகித்
திகழும் பொதுநடம் நான்காணல் வேண்டும்
என்மய மாகி இருப்பாயோ தோழி
இச்சை மயமாய் இருப்பாயோ288 தோழி
 
70.அம்பலவாணர் வருகை
 #4376. இச்சையின் வண்ணம் எனக்கருள் செய்ய
இதுதரு ணம்இங்கு வாரீர்
இன்னமு தாயினீர் வாரீர் வாரீர்
 
70.அம்பலவாணர் வருகை
#4423. எச்ச உரையன்றென் இச்சைஎல் லாம்உம
திச்சைகண் டீர்இங்கு வாரீர்
அச்சம்த விர்த்தீரே வாரீர் வாரீர்
 
71.அம்பலவாணர் ஆடவருகை
#4468. நச்சுகின்றேன் நிச்சலிங்கே ஆடவா ரீர்
நாணமச்சம் விட்டேனென்னோ டாடவா ரீர்
விச்சையெலாம் தந்துகளித் தாடவா ரீர்
வியந்துரைத்த தருணமிதே ஆடவா ரீர்
எச்சுகமும் ஆகிநின்றீர் ஆடவா ரீர்
எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர்
இச்சைமய மாய்இருந்தேன் ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர் ஆடவா ரீர்
 
79.சிவசிவ ஜோதி
#4581. அச்சம் தவிர்த்தமெய் ஜோதி - என்னை
ஆட்கொண் டருளிய அம்பல ஜோதி
இச்சை எலாம்தந்த ஜோதி - உயிர்க்
கிங்குமங் கென்னாமல் எங்குமாம் ஜோதி சிவசிவ
 
84.பெறாப் பேறு
#4638. அச்சமெலாம் தவிர்த்தருளி இச்சைஎலாம் அளித்த
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
துச்சவுல காசாரத் துடுக்கனைத்தும் தவிர்த்தே
சுத்தநெறி வழங்குவித்த சித்தசிகா மணியே
உச்சநிலை நடுவிளங்கும் ஒருதலைமைப் பதியே
உலகமெலாம் எடுத்திடினும் உலவாத நிதியே
இச்சமயம் எழுந்தருளி இறவாத வரமும்
எல்லாஞ்செய் வல்லசித்தின் இயற்கையுந்தந் தனையே
 
92.மெய் இன்பப் பேறு
#4724. இச்சைவே றில்லைஇங் கென்கருத் தெல்லாம்
என்னுள் அமர்ந்தறிந் தேஇருக் கின்றீர்
விச்சை எலாம்வல்ல நுந்திருச் சமுக326
விண்ணப்பம் என்னுடல் ஆதியை நுமக்கே
நிச்சலும் தந்தனன் என்வசம் இன்றி
நின்றனன் என்றனை நீர்செய்வ தெல்லாம்
எச்செயல் ஆயினும் செய்துகொள் கிற்பீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே
 
111.பந்தாடல்
#4957. வெங்கேத மரணத்தை விடுவித்து விட்டேன்
விச்சைஎ லாம்கற்றென் இச்சையின் வண்ணம்
எங்கேயும் ஆடுதற் கெய்தினேன் தோழி
என்மொழி சத்தியம் என்னோடும் கூடி
இங்கே களிப்பது நன்றிந்த உலகோ
ஏதக் குழியில் இழுக்கும் அதனால்
அங்கேபா ராதேநீ ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து ஆடேடி
 
112.மெய்யருள் வியப்பு
 #4969. அப்பா நின்னை அன்றி எங்கும் அணைப்பார் இல்லை யே
அந்தோ நின்னை அன்றி எங்கும் அருள்வார் இல்லை யே
எப்பா லவர்க்கும் நின்னை அன்றி இறைமை இல்லை யே
எனக்கும் நின்மே லன்றி உலகில் இச்சை இல்லை யே
எனக்கும் உனக்கும்
 
112.மெய்யருள் வியப்பு
#5045. அச்சம் தீர்த்திங் கென்னை ஆட்கொண் டருளும் அமுத னே
அடியேன் பிழைகள் அனைத்தும் பொறுத்துள் அமர்ந்த அமுத னே
இச்சை யாவும் முடித்துக் கொடுத்துள் இலங்கும் குரவ னே
என்றும் இறவாக் கல்வி அடியேற் கீய்ந்த குரவ னே
எனக்கும் உனக்கும்
 
115.சிவபோகம்
#5215. எச்சநீட்டி விச்சைகாட்டி இச்சைஊட்டும் இன்பனே
அச்சம்ஓட்டி அச்சுநாட்டி வைச்சுள்ஆட்டும் அன்பனே
 
122.ஊதூது சங்கே
 #5272. அச்சம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே
அம்பல வாணன்என்று ஊதூது சங்கே
இச்சை அளித்தான்என்று ஊதூது சங்கே
இன்பம் கொடுத்தான்என்று ஊதூது சங்கே
 
125.தனித் திருஅலங்கல்
#5364. இச்சைஎலாம் புகன்றேன்என் இலச்சைஎலாம் விடுத்தேன்
இனிச்சிறிதும் தரியேன்இங் கிதுதருணத் தடைந்தே
அச்சைஎலாம் வெளிப்படுத்தி அச்சம்எலாம் அகற்றி
அருட்சோதித் தனிஅரசே ஆங்காங்கும் ஓங்க
விச்சைஎலாம் எனக்களித்தே அவிச்சைஎலாம் தவிர்த்து
மெய்யுறஎன் னொடுகலந்து விளங்கிடுதல் வேண்டும்
பச்சைஎலாம் செம்மைஎலாம் பொன்மைஎலாம் படர்ந்த
படிகமணி விளக்கேஅம் பலம்விளங்கும் பதியே
 
125.தனித் திருஅலங்கல்
#5367. வினைத்தடைதீர்த் தெனைஆண்ட மெய்யன்மணிப் பொதுவில்
மெய்ஞ்ஞான நடம்புரிந்து விளங்குகின்ற விமலன்
எனைத்தனிவைத் தருளொளிஈந் தென்னுள்இருக் கின்றான்
எல்லாஞ்செய் வல்லசித்தன் இச்சையருட் சோதி
தினைத்தனைபெற் றவரேனும் சாலுமுன்னே உலகில்
செத்தவர்கள் எல்லாரும் திரும்பவரு கென்று
நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர்கண்டாய் எனது
நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே
 
125.தனித் திருஅலங்கல்
#5456. பிச்சுலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன்
இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே
அச்சமெலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்
நிச்சலும்பே ரானந்த நித்திரைசெய் கின்றேனே
 
132.உலகர்க்கு உய்வகை கூறல்
#5560. அச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர்
அம்மையும் அப்பனும் ஆர்எனத் தெரியீர்
பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப்
பலித்தநும் வாழ்க்கையில் பண்பொன்றும் இல்லீர்
பிச்சையிட் டுண்ணவும் பின்படு கின்றீர்
பின்படு தீமையின் முன்படு கின்றீர்
இச்சையில் கண்மூடி எச்சகம் கண்டீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே
 
142.அனுபவ மாலை 
#5717. இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
யான்செய்தவம் யார்செய்தார் இதுகேள்என் தோழி
எச்சமயத் தேவரையும் சிற்றுரும்பென் றேனும்
எண்ணுவனோ புண்ணியரை எண்ணுமனத் தாலே
பிச்சிஎன நினைத்தாலும் நினையடிநீ அவரைப்
பிரிவேனோ பிரிவென்று பேசுகினும் தரியேன்
விச்சைநடம் கண்டேன்நான் நடங்கண்டால் பேயும்
விடத்துணியா தென்பர்கள்என் விளைவுரைப்ப தென்னே
 

 



அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

Subscription (Free)


Vallalar Groups
Subscribe to vallalargroups
Email:
                          
Visit this group